Monday, June 21, 2010

Prayer Points

சபைகளுக்கு தினமும் ஜெபிக்க விசேஷ ஜெப குறிப்புகள் - ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். (ரோமர் 12:12)


லூக்கா 10:2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.


1. கர்த்தர் திரளான மெய்யான தேவனை அறியாத ஜனங்களை இரட்சித்து தமது மந்தையில் சேர்க்கும்படியாய் ஜெபிப்போம். - ( சங் 2:8 )

2. விடமுடியாத தீய பழக்கங்களில் அகப்பட்டவர்களை கர்த்தர் சபைக்கு அழைத்து வந்து அவர்களை விடுதலை செய்யும்படியாய் ஜெபிப்போம். - ( யோ 8:38 )

3. தேவபிள்ளைகள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி ஜெபிப்போம். - ( எபே 6:11 )

4. தேவபிள்ளைகள் யாவரும் சமாதானமும் ஒருமனமும் உள்ளவர்களாயிருக்க ஜெபிப்போம். - ( எபே 4:3 )

5. பரிசுத்த வாழ்வைக்குறித்த வைராக்கியம் விசுவாசிகளுக்குள் காணப்பட ஜெபிப்போம். - ( 1 தெச 4:3,7)

6. விசுவாசிகள் வீட்டில் தேவனை அறியாதவர்களை கர்த்தர் இரட்சிக்கும்படியாக ஜெபிப்போம். ( அப் 16:31)

7. விசுவாசிகள் யாவர் வீட்டிலும் குடும்ப ஜெபம் நடைபெற ஜெபிப்போம். - ( யோசு 24:15 )

8. கடன் பிரச்சினைகளில் உள்ள தேவ பிள்ளைகளை கர்த்தர் விடுதலையாக்கி ஆசீர்வதிக்கும்படியாய் ஜெபிப்போம். - ( உபா 28:12 )

9. தேவ பிள்ளைகள் யாவரும் எப்பொழுதும் நல்ல சரீர ஆரோக்கியத்தோடு இருக்க ஜெபிப்போம் - ( யாத் 15:26 )

10. கிறிஸ்துவின் சிந்தை ஒவ்வொரு தேவப்பிள்ளைகளுக்கும் காணப்படும்படியாக ஜெபிப்போம். ( பிலி 2:5 )

11. தேவபிள்ளைகள் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க ஜெபிப்போம். - ( பிலி 4:4 )

12. விசுவாசிகள் காலத்தை வீணடிக்காமல் ஜாக்கிரதையோடு செலவிட ஜெபிப்போம். ( எபே 5:16 )

13. ஆகாத சம்பாஷணைகள் விசுவாசிகளுக்குள் காணப்படாதபடி ஜெபிப்போம். ( I கொரி 15:33 )

14. விசுவாசிகள் ஞாயிறு ஆராதனைகளை தவற விடாமல் கர்த்தரை ஆராதிப்பதில் வைராக்கியம் காண்பிக்க ஜெபிப்போம். - எபி ( 10:25 )

15. ஒவ்வொரு விசுவாசிகளும் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாயிருக்க ஜெபிப்போம். - ( கொரி 9:16 )

16. விசுவாசிகள் தங்கள் ஜெப வாழ்க்கையையும் வேத தியானிப்பையும் சரியாய் காத்துக் கொள்ள ஜெபிப்போம் - (1 பேதுரு 4:7, யோ 5:39 )

17. நல்ல வேலையில்லாத தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் நிரந்தர வேலை கொடுக்க ஜெபிப்போம். ( III யோ 2 )

18. திருமணத்திற்காக காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் ஏற்ற துணையை கொடுக்க ஜெபிப்போம். - ( ஆதி 2:18 )

19. சபையிலே கர்த்தர் கொடுக்கும் தம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியகூடிய பெலனை கர்த்தர் விசுவாசிகள் யாவருக்கும் கொடுக்க ஜெபிப்போம். - ( யாக் 1:22 )

20. விசுவாசிகள் ஒருவரும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்காமல் கர்த்தருக்குள் உறுதியை நிலைத்திருக்க ஜெபிப்போம். ( யூதா 24 )

21. விசுவாசிகளின் வீடுகளில் அநேக வீட்டுகூட்டங்கள் ஆரம்பிக்கப்பட ஜெபிப்போம். - ( மாற்கு 2:1-12)

22. விசுவாசிகள் யாவரும் ஆராதனைக்கு சரியான நேரத்திற்கு வரும்படி ஜெபிப்போம். - ( எபே 5:16 )

23. ஒவ்வொரு விசுவாசிகளும் அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறவர்களாக காணப்பட ஜெபிப்போம். - (நீதி 8:17)

24. தேவ பிள்ளைகளின் கைகளின் பிரயசாங்களையெல்லாம் கர்த்தர் ஆசிர்வதிக்கும்படி ஜெபிப்போம். - ( ஆதி 26:12 )

25. ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும்படி ஜெபிப்போம். - ( ரோமர் 8:14 )

26. கர்த்தருடைய சத்தத்திற்கு முற்றும் கீழ்படியக்கூடிய இருதயம் தேவ பிள்ளைகளுக்கு எப்பொழுதும் காணப்படும்படி ஜெபிப்போம். - ( அப் 9:6 )

27. அற்புதங்களை பெறுகிற ஒவ்வொரு அவிசுவாசிகளும், இரட்சிக்கப்பட்டு விசுவாசிகளாகி சபையில் சேர்க்கப்பட ஜெபிப்போம். - ( மாற்கு 10: 46-52 )

No comments: