Saturday, June 19, 2010

Jesus cures

தேவனிடமிருந்து ஒரு தொடுதல் கரங்களை வைத்தல்

கரங்களை வைத்தல் என்பது நாம் ஏற்கெனவே பார்த்த அடிப்படை பாடங்களான, நித்திய மரணத்திற்கு நேராக நடத்தும் செயல்களிலிருந்து மனந்திரும்புதல், தேவன் மேலுள்ள விசுவாசம் மற்றும் ஞானஸ்நானத்தைக் குறித்த போதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாகும். இது எபிரெயர் 6:1,2ல் கூறப்பட்டுள்ள நாலாவது அஸ்திபாரக் கல்லாகும்.

வேதாகமம் முழுவதுமாக கரம் ஓரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அது ஒரு நபரின் ஒரு பகுதியாக, தேவனுடைய ஆசீர்வாதம், அதிகாரம் மற்றும் வல்லமையைக் காண்பிக்கின்ற ஓரு வழியாகவும் இருக்கிறது. ஆசாரியனான எலியேசர் ""... தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளை கொடுத்தான். எண்ணாகமம் 27:23 ""மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்''. உபாகமம் 34:9. நாம் ஒருவர் மீது கைகளை வைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் மூலம் தேவன் நமக்கு அளித்த உயிரடையச் செய்யும் ஆசீர்வாதம் மற்றும் வல்லமையை அளிக்கக்கூடிய அதிகாரத்தை நாம் உபயோகிக்கிறோம்.

நாம் இப்பொழுது பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கரங்களை வைக்குதலைக் குறித்து பார்ப்போம்.

உங்கள் குழந்தைகளை ஆசீர்வதித்தல்

பெற்றோரே, நீங்கள் இயேசுவின் நாமத்தில் உங்கள் பிள்ளைகளின்மேல் கைகளை வைப்பதின் மூலம் அவர்களை நம் பிதாவின் அன்பினாலும், பாதுகாப்பினாலும் மூடலாம். சிறு பிள்ளைகள் இயேசுவினிடத்தில் வந்தபோது ""அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களை ஆசீர்வதித்தார்.'' மாற்கு 10:16. பெற்றோரே, புதிதாகப் பிறந்த உங்கள் பிள்ளைகளை தேவனுக்கு அர்ப்பணிக்கும்படியாகவும், ஆசீர்வதிக்கும் படியாகவும் பொது ஆராதனைக்குக் கொண்டு வாருங்கள். இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, வீட்டில் பிள்ளைகளின்மீது கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதியுங்ள்.

வியாதியுள்ளவர்களுக்காக ஜெபித்தல்

வியாதியாயிருந்தவர்களைக் குணமாக்க இயேசு பல வழிகளைக் கையாண்டார். கைகளை வைத்தல் என்பது அவர் மக்களுடன் தொடர்புகொள்ளக் கையாண்ட ஒரு பொதுவான முறையாக இருந்தது. ""அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களை சொஸ்தமாக்கினார்.'' லூக்கா 4:40.

அநேகமுறை மக்கள் வியாதியாயிருந்தவர்கள்மேல் தமது கரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டு இயேசுவிடம் வந்தனர். ""தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப் போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்றான், இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடே கூட அவன் பின்னே போனார்.'' மத்தேயு 9:18,19.

மற்ற சமயங்களில் மக்கள் தாங்கள் சுகம் பெறும்படியாக இயேசுவைத் தொடவோ அல்லது, அவர் தங்களைத் தொடும்படியாகவோ கேட்டனர். பரிசுத்த ஆவியின் வல்லமை, இயேசுவின் சரீரப்பிரகாரமான தொடுதலின் மூலம் வெளிப்பட்டு, அவர்கள் அனைவரையும் குணமாக்கியது.

நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர் களுக்கு அவர் அளித்த வாக்குத்தத்தம் சபைத்தலைவர் களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. இயேசு சொன்னார்: ""நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைத் பிரசங்கியுங்கள். விசுவாச முள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்... விசுவாசிக் கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன... வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்''. மாற்கு 16:15-18.

உங்களைப் பராமரிக்கவும், ஆவிக்குரிய சுகமளிக்கவும் சபை மூப்பர்களுக்குப் பொறுப்பு உண்டு.

நீங்கள் ஆலைய ஆராதனைக்குச் செல்ல இயலாதபடி சுகவீனமாயிருப்பீர்களானால், அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து, இயேசுவின் நாமத்தில் உங்களுக்காக ஜெபிக்கும்படி அழைக்கலாம். ""உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்''. யாக்கோபு 5:14,15.

கரங்களை வைக்குதல் என்பது குணமளிக்கும் ஊழியத்தைச் சேர்ந்தது.

அற்புதங்களை நடப்பித்தல்

இயேசு வியாதியாயுள்ளவர்களை குணமாக்கவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் மக்களைத் தொட்டதினால், அவர் கரங் களினால் அற்புதங்கள் நடைபெற்றதாகப் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ""இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?'' என்றனர் மாற்கு 6:2.

அதேபோல பவுலும் சீலாவும், தங்கள் முதலாவது மிஷனெரிப் பயணத்தின்போது, தங்கள் கரங்களை அற்புதங் களை நடப்பிப்பதற்குப் பயன்படுத்தியதாகக் காண்கிறோம். ""அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக, அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம் பண்ணினார்."" அப். 14:3.

""பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.'' அப். 19:11 என்றும் காண்கிறோம்.

தானாக இயங்கக்கூடிய ஏதோ ஒன்றோ அல்லது மாந்திரீக வல்லமையோ, ஆதிக்கிறிஸ்தவர்களின் கரங்களில் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் கரங்களை வைத்தபோது சுகத்தையும் ஆசீர்வாதத்தையும் அளிக்க தேவனே பிரியம் கொண்டார். அற்புதங்களுக்கான நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கும்படி நாம் தேவனை வேண்டிக் கொள்ளலாம். ""உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே, அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகம் செய்தருளும் என்றார்கள்.'' அப். 4:29,30. நம் ஆண்டவர் நம்முடைய கரங்களைத் தொட்டு, நம் மூலமாக அற்புதங்களை நடப்பிக்கும்படி நாம் ஜெபிக்கலாம்.

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் ஆவியின் வரங்களையும் பகிர்ந்தளித்தல்

சுவிசேஷத்தை புதிதாக ஒரு கூட்டம் மக்களுக்கு அறிவித்த போது, அவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தவர்கள், புதிய விசுவாசிகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரைப் பெறும்படியாக அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன:

சமாரியாவில் அப்போஸ்தலர்கள் ""அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்'' அப் 8:17.

பவுல் பார்வையடையும்படியாகவும், ...பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படியாகவும் அனனியா அவன்மேல் கைகளை வைத்தான் அப்போஸ்தலர் 9:17. அப்பொழுதுதான் இயேசுவை விசுவாசித்த எபேசுவிலிருந்த சீஷர்கள் மேல் பவுல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார். அப்போஸ்தலர் 19:6.

புதிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளும்படி பொதுவாக அவர்கள்மேல் கைகள் வைக்கப்பட்டதை நாம் வேதத்தில் காண்கிறோம்.

சில இடங்களில் கைகளை வைக்குதலின் மூலம் ஆவிக்குரிய வரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதைக் காண்கிறோம். எபேசுவில் விசுவாசிகளானவர்கள்மேல் பவுல் கைகளை வைத்தபோது அவர்கள் அந்நியபாஷைகளில் பேசி, தீர்க்கத்தரிசனம் உரைத்ததைக் காணலாம் அப். 19:6.

""மூப்பராகிய சங்கத்தார் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே'' என 1 தீமோத்தேயு 4:14ல் அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு நினைப் பூட்டுகிறார். ""நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்'' என பவுல் 2 தீமோ 1:6ல் பின்னர் கூறும்போது, அவர் அதே நிகழ்ச்சியையோ அல்லது அதுபோன்ற வேறொன்றையோ குறிப்பிட்டிருக்கலாம்.

இந்த வரம், பவுல் 1 தீமோ. 4:14ல் குறிப்பிடுகின்ற பிரசங்கிக்கும், மற்றும் போதிக்கும் வரங்களைக் குறிக்கலாம்.

சபைத் தலைவர்களை நியமித்தல்

இறுதியாக, கைகளை வைத்தல் என்பது மக்களை ஓரு பணிக்காக அல்லது ஊழியத்திகாக தேவ வல்லமையை அளிக்குமாறும், தகுதிப்படுத்துமாறும் வேண்டிக்கொள் வதுடன் தொடர்பு செய்யப்பட்டது. உதாரணமாக, மூப்பர்கள் நியமிக்கப்பட்டபோது சபை, அவர்ளை அப்போஸ்தலர்கள் முன்பாகக் கொண்டுவந்து, ""...ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்'' அப்போஸ்தலர் 6:6.

அதேபோன்று, அந்தியோகியா சபையார் பவுலையும், பர்னபாவையும் அனுப்பிவிடும்போது, ""...உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்''அப்போஸ்தலர் 13:3.

உங்கள் தலைவர்களைப் பின்பற்றுங்கள்

இயேசுவே உள்ளூரிலும், உலகளவிலுமுள்ள சபைக்குத் தலையானவர். இயேசு பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருந்து, சபையை நடத்தக்கூடிய, சபையிலுள்ள வர்கள் பக்திவிருத்தியடையும்படி அவர்களுக்குப் போதிக்கக்கூடிய தலைவர்களை அளிக்கிறார்.

தலைவர்கள் தேவன் ஏற்படுத்திய அதிகாரங்களா யிருக்கிறார்கள்.

பல விதமான வரங்களும் பொறுப்புகளும் அவர்களுக்கு உண்டு. நீங்கள் சபையின் மூப்பர்கள், தலைவர்கள் மற்றும் ஊழியர்களை அறிந்து, அவர்களுடைய ஆவிக்குரிய திறமை மற்றும் அதிகாரங்களின் மூலம் பலன்பெறுவீர்கள்.

கரங்களும், முழங்கால்களும்

இங்கு, சபையின் அனைத்து ஊழியங்களுக்கும் அடிப்படையாக, பணிவிடை ஊழியத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். முதன்மையான ஊழியரானாலும், அல்லது காணக்கூடாத வகையில் ஊழியம் செய்கிறவரேயா னாலும் அனைவரும் பணிவிடைக்காரரே. இயேசு, தம்மையும் ஒரு பணிவிடைக்காரர் என்றே குறிப்பிட்டார்.

சீஷர்கள், ஊழியத்தைவிடத் தங்கள் தகுதியில் நாட்டங் கொண்டபோது, அவர் அவர்களுடைய எண்ணத்தை புதிதாக்கும்படிக்கு, அவர்களிடம்: ""புறஜாதிகளுடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாக இருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாக இருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்'' என்று கூறினார் மத்தேயு 20:25...-28.

சீஷர்கள் முழங்காலிட்டு, ஒருவருடைய கால்களை மற்றொருவர் கழுவவிரும்பாமல் பெருமை கொண்டிருந்த போது, இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவியதின்மூலம் அவர்களுக்கு சீஷத்துவத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார். அதற்குப்பின், அவர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை, அல்லது மற்றவர்களுக்குப் பொறுப்பாக இருப்பதின் அடிப்படையை அடிக்கோடிட்டுக் காட்டினார். ""அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.'' என்றார்.

யோவான் 13:12-17

தங்கள் பதவியில் பெருமைகொண்ட, மற்றவர்கள் தங்களுக்குப் பணிவிடை செய்யும்படி எதிர்பார்த்த, சபையில் முக்கிய பொறுப்பு வகிப்பதில் மட்டுமே தங்கள் மனதைச் செலுத்தி, பிறருடைய நலனில் கவனம் செலுத்த நேரமே இல்லாத மக்கள் பிலிப்பி பட்டணத்தின் சபையில் இருந்தனர்.

அப்போஸ்தலன் அவர்களைக் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, தாழ்மையையும், பணிவிடை ஆவியையும் கொள்ளும்படிக் கூறுகிறார். ""ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ் மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷசாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்'' பிலிப்பியர் 2:3-...8. நாம் இப்பொழுது பார்க்க இருக்கின்ற ஊழியங்கள் அனைத்தும், கைகளை வைப்பதின் மூலமாக அளிக்கப் படுகின்றன. அவர்கள் தங்கள் தலைமைத்துவமாகிய வரத்தை, தங்களைத் தாங்களே கட்டுவதற்குப் பயன்படுத்தாமல், தங்கள் சபையைக் கட்டியெழுப்புவதற்கு பயன்படுத்த வேண்டும்.

மூப்பர்கள்

பவுலும், பர்னபாவும், முதல் மிஷனெரிப் பயணத்தை முடித்துவிட்டு, அந்தியோகியா திரும்பினபோது, அவர்கள் புது விசுவாசிகளையும், புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளூர் தலைவர்களையும் சந்தித்தார்கள். ""அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து, ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்''. அப். 14:23.

பவுல் கிரேத்தா தீவில் ஒரு சில வேலைகளை முடிக்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தார். எனவே, உள்ளூர் நபர்களை சபைத் தலைவர்களாக நியமித்து, நன்றாகக் காரியங்களை நடத்தவும், புது விசுவாசிகளைப் பராமரிக்கவும், தீத்துவை கிரேத்தா தீவிற்கு அவர் அனுப்பினார். ""நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேனே'' தீத்து 1:5.

ஒரு உள்ளூர் சபையைக் குறித்துப் பேசும்போது, வேதாகமம் ஒரே நபரைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அவை, மூப்பர் மற்றும் மேய்ப்பர். மூப்பர் அல்லது மேய்ப்பர் ஆவிக்குரிய தெளிவையும், அனுபவத்தையும், விசுவாசிகளை மேற்பார்வையிடுவதையும் வலியுறுத்துகிறார். ""உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால்'' என்று எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் எபிரேயர் 13:17ல் கூறுகிறார். மூப்பராவதற்குரிய தகுதிகள், 1 தீமோ. 3:1-7லும், தீத்து 1:5-9லும் கூறப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலிலிருந்து அவர்கள் தங்கள் வேலையிடத்திலும், சொந்த ஊரிலும், நற்பெயர் எடுத்தவர்களாகவும், தங்கள் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவர்களாயும், நற்குணசாலிகளாகவும், விசுவாசப் பரீட்சையில் தேறினவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் சபையிலுள்ளவர்களை, அன்பாய் விசாரிக்கிறவர்களாயும், அவர்களுடைய பாதுகாப்பிலும், முதிர்ச்சியை நோக்கிய அவர்கள் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களாயும், தங்கள் வார்த்தை, வாழ்க்கை, மற்றும் நடக்கை மூலம் தங்கள் மந்தைக்கு மாதிரிகளாக இருப்பவர்களாகவும் இருக்கவேண்டுமென்று காண்கிறோம்.

பவுலும், பேதுருவும் மூப்பர்களின் கடமைகளைக் குறித்து பின்வருமாறு கூறுகின்றனர். ""உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்'' அப். 20:28.

""உங்களிலுள்ள மூப்பனுக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும்... பங்காளியு மாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாயல்ல; மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்திரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர் களாக அல்ல, மந்தைக்கு மாதிரியாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்''. 1 பேதுரு 5:1-3.

""நீ வார்த்தையினாலும், நடக்கையினாலும், அன்பினாலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு'' 1 தீமோ. 4:12. தேவனுடைய வார்த்தை மூப்பர்களுக்கு ஒர் உயர்ந்த இடத்தை அளித்து அவர்களி டமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது. அவர்கள் உங்கள் நன்மைகளுக்காக ஏற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுடைய தலைமைத்துவத்திற்கு உங்களுடைய அன்பான ஆதரவு தேவைப்படுகிறது. அவர்கள் உங்களை மேற்பார்வையிட்டு, உங்களை நேசிக்கிற அன்பான சகோதரர்களாக இருக்கிறார்கள்.

உதவிக்காரர்கள்

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் கண்காணிகளைக் குறித்துக் குறிப்பிடுகிறார். ""...பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது'' பிலிப்பியர்1:1.

அப்போஸ்தலர் நடபடிகளை எழுதின லூக்கா எருசலேம் சபையிலிருந்த ஏழை விதவைகளுக்குத் தினசரி உணவைப் பகிர்ந்தளிக்க சிலர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுகிறார். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த முறை இன்றும் செயல்படுகிறது.

எருசலேமிலிருந்த ஒருங்கிணைப்பாளர்கள், அவர்கள் பகுத்தறியும் திறனுக்காகவும், உண்மைத் தன்மைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ""பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற...'' அப்.6:3. ""பந்தி விசாரிப்பு'' என்பது அவர்களுடைய குறிப்பிட்டவேலையாக இருந்தது.

""உதவிக்காரன்'' என்னும் கிரேக்க வார்த்தையின் பொருள் ""ஒரு வேலைக்காரன்'' என்பதாகும்.

1 தீமோ. 3:8-13ல் கொடுக்கப்பட்டுள்ள, அவர்களுடைய தகுதிப் பட்டியலில் ""...நல்லொழுக்கமுள்ளவர்களாயும், விசுவாசத் தின் இரகசியத்தைச் சுத்த மனசாட்சியிலே காத்துக் கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். மேலும், இவர்கள் முன்னதாக சோதிக்கப்படவேண்டும் என்றும், குற்றம் சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியம் செய்யலாம்'' என்ற வலியுறுத்தலும் உள்ளது.

உள்ளூர் சபையில் பெண்களும், ஆண்களுமான கண்காணிகள்(உதவிக்காரர்கள்) குறிப்பிட்ட வேலைகளை மூப்பர்களுக்கு பதிலாகச் செய்கிறார்கள். உதாரணமாக: பணத்தை கையாளுதல், விசாரிப்பு, வீடுகளைச் சந்தித்தல், சமூக சேவையை ஒழுங்குபடுத்துதல், விடுமுறை மற்றும் வாரக்கடைசி நாட்கள், சபையின் பல்வேறு குழுக்களை முன்னின்று நடத்துதல்.

""...ஒருவன் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக...'' என்று பேதுரு கண்காணிகளைக் குறித்து 1 பேதுரு4:10,11ல் குறிப்பிடுகிறார்.

ஊழியங்கள்

ஒரு குழுவாக இணைந்து புது சபைகளை நாட்டவும், நாட்டப்பட சபைகளைப் பெலப்படுத்தவும், தேவன் ஊழியங்களை ஏற்படுத்தியுள்ளார். பரத்திற்கு ஏறின கிறிஸ்துவைக் குறித்துப் பவுல் ""...கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்'' எபேசியர் 4:12,13 என்று கூறுகிறார்.

இந்த ஊழியங்கள், ஒருவரோடொருவர் இணைந்து செய்யப்பட வேண்டும். இவை ஒரு தனி நபராக செய்கிற "தனி நபர் ஊழியத்தை' விட மேலான ஏற்பாடாகும்.

இன்று சபையின் தலைவராகிய கிறிஸ்து, சபையின் தலை வர்கள் தமது வாழ்க்கையை வெளிப்படுத்தும்படி அழைக் கிறார். அவர்கள் அவருடைய அதிகாரத்தின் பிரதிநிதிகளாக இருந்து, அவருடைய ஊழியத்தைத் தொடருகிறார்கள்.

மூப்பராய் இருப்பதும், கண்காணியாய் இருப்பதும் உள்ளூர் சபையின் ஊழியங்களாகும்.

அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப் பர்கள், போதகர்கள் போன்ற ஊழியங்கள் முழுச்சபைக்கும் உரியவை. நீங்கள் இந்த ஊழியங்கள் மூலமாக இப்பொழுது பயன் அடைகிறீர்கள். ""துணிச்சலான கிறிஸ்தவன்'' என்னும் புத்தகத்தில் கிறிஸ்தவ எழுத்தாளரான ஆர்தர் வாலிஸ், ""அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும் அறிந்து கொண்டு அவர்களை கிரியை செய்யவிடுவது தற்போதைய காலத்து முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்'' என்று கூறுகிறார்.

அப்போஸ்தலர்

அப்போஸ்தலர் என்பவர் உபதேசங்கள், ஒழுங்குமுறை, உள்ளூர் சபையில் அதிகாரங்கள் போன்றவற்றிற்கு அஸ்திபாரமிடும் ஒரு ""அனுப்பப்பட்ட'' நபராவார். அவர் ஒரு ஆவிக்குரிய தகப்பனாகவும், தலைமையேற்றுக் கட்டுபவராகவும் இருக்கிறார். ""எனக்கு அளிக்கப்பட்ட தேவ கிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப் போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின் மேல் கட்டுகிறான்'' 1 கொரிந்தியர் 3:10. இன்று ஒவ்வொரு சபைக்கும், அப்போஸ்தலரின் ஞானத்தை அளிக்கக்கூடிய, அவர்களுடைய அடிப்படையை சரிபார்க்கக்கூடிய, தேவைப்படும் இடங்களில் அவர்களைப் பலப்படுத்தக்கூடிய ஒருவர் தேவைப்படுகின்றார்.

தீர்க்கத்தரிசி

ஒரு தீர்க்கதரிசி தேவனுடைய திட்டங்களுக்குள் ""பார்க்கிறார்'', தேவனுடைய வார்த்தையைப் பேசி, தரிசனத்தை அளிக்கிறார். அவர் ஒரு நோக்கத்தையும் வழியையும் கொண்டு வருகிறார். மக்களை உற்சாகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும்படியாக அப்போஸ்தலர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகிறார்.

1 கொரிந்தியுர் 12:28ல் ""தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும்... ஏற்படுத்தினார்'' என்றும், ""அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார்'' என்றும் எபேசியர் 2:20ல் காண்கிறோம்.

தீர்க்கதரிசிகள் சபைக்குக் கண்களாக இருக்கின்றனர். அவர்கள் சபைகளை, தேவன் தந்த தரிசனத்திற்கு நேராக நடத்துகிறவர்கள்.

சுவிசேஷகர்கள்

சுவிசேஷகர் நற்செய்தியை அறிவித்துக் காணாமல் போனவர்களை தேடி, பிணியாளிகளை குணமாக்கி, பிசாசு களைத் துரத்துகிறார். மேலும் வார்த்தைகளினாலும் அற்புதங்களின் மூலமாகவும் சாட்சி பகரும்படி அவர் சபை மக்களை ஊக்குவிக்கிறார். பிலிப்பு ஒரு சுவிசேஷகன் என்று அழைக்கப்பட்டார். அப். 21:8. அவருடைய ஊழியத்தைக் குறித்து நாம் அப்போஸ்தலர் 8ல் காணலாம்.

மேய்ப்பர்களும் போதகர்களும்

ஒரு மேய்ப்பர், பொது இடத்திலும், தனிப்பட்ட ஆலோசனையின் மூலமாகவும் ஆட்சிசெய்து, கவனித்து, முன்னடத்திச் சென்று தேவ வார்த்தையால் மக்களைப் போஷிக்கிறார். ஒரு போதகர், அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகளின் போதகங்களை சபை அங்கத்தினருக்கு விவரித்து, அவைகளை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த உதவிசெய்கிறார்.

குழு ஊழியம்

ஆதி சபையில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து பங்காளர்களாக பல்வேறு குழுக்களின் அங்கத்தினர்களாக ஊழியம் செய்தார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் அப்போஸ்தலர்களால் பயன்படுத்தப்பட்டு, மதிக்கப்பட்டார் கள். பவுல் ரோமர் 16ல் ஆண்களையும் பெண்களையும் ""உடன் வேலையாட்களாகவும்'' ஆண்களை, ""உத்தமர் களாகவும்'' பெண்களை ""கர்த்தருக்குள் பிரயாசப் படுகிறவர்களாகவும்'' குறிப்பிடுகிறார். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இணைந்த கணவன் -மனைவி குழுவானது ""கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றி யறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்'' என ரோமர் 16:3,4ல் வருணிக்கப்படுகிறது.

""சன் ரைஸ் மினிஸ்ட்ரீஸ்'' மற்றும் அகாப்பே பைபிள் பெல்லோஷிப் சபைகள் ஆண்கள் மற்றும் பெண்களின் ஊழியங்களை அறிந்து அவற்றை முழுவதுமாக வெளிக் கொண்டுவர விரும்புகிறது.

கீழ்ப்படியும் இருதயம்

இக்காலத்தில் சபையில் ஊழியம் செய்கின்ற, தேவனால் அருளப்பட்ட தலைவர்கள், ஊழியங்கள், மூப்பர்கள் மற்றும் கண்காணிகள் ஆகியோரைக்குறித்து சில தனிப்பட்ட செயல் விளக்கக் காரியங்களை நாம் இங்கு காணலாம்.

அவர்களுக்கு கீழ்ப்படிகின்ற ஒரு இருதயத்தைக் கொண்டிருங்கள். அப்பொழுது தேவன் தம்முடைய ஆவிக்குரிய அதிகாரம் என்னும் குடையினால் உங்களை மறைத்து ஏற்ற சமயத்தில் மற்றவர்கள்மேல் அதிகாரத்தை உங்களுக்கு அருளுவார். மத்தேயு 8:9. ஒரு தலைவனுடைய வாழ்விலும் ஊழியத்திலும் தேவனுடைய வார்த்தை எந்த அளவிற்கு ஆட்சி செய்கிறது என்பதைப் பொறுத்தும், தேவனுடைய அபிஷேகத்தைப் பொறுத்துமே, அவருடைய அதிகாரமும் அமைந்திருக்கும்.

உங்கள் தலைவர்களை வாழ்த்துங்கள்

அவர்கள் விசுவாச வாழ்வின் மாதிரியைப் பின்பற்றுங்கள். அவர்களுக்காகவும், அவர்கள் ஊழியங்களுக்காகவும், அவர்கள் குடும்பங்களுக்காகவும் ஜெபியுங்கள். மனம்குளிர அவர்களை வாழ்த்துங்கள், அவர்கள் நேசிக்கபடுவதையும், வரவேற்கப்படுவதையும் உணரச் செய்யுங்கள். அவர்களைப் பாராட்டி, அவர்களுக்குரிய கனத்தையும், மதிப்பையும் அளியுங்கள்.

""சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக் கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்'' 1 தெசலோனிக்கேயர் 5:12,13.

""தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். உங்களை நடத்துகிற வர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால் அவர்கள் துக்கத்தோடே அல்ல சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள், உங்களை நடத்துகிறவர்களை வாழ்த்துங்கள்'' எபிரெயர் 13:7,17,24.

சபையை உருவாக்குதல்

"லீடர்ஷிப், பேட்டர்ன்ஸ் �பார் பிப்ளிக்கல் லீடர்ஷிப் டுடே' என்னும் புத்தகத்தில், �பிலிப் கிரீன்ஸ்லேட் என்னும் வேதபோதகர், ""தம்மை பிரதிபலிக்கக்கூடிய ஐந்து ஊழிய வரங்களைப் பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ்து அளிக்கிறார். அவை முழு சபைக்குமான ஊழியங்கள். அவை சபைப்பாகுபாடு அற்றவை, எந்த ஒரு உள்ளூர் சபையும் முற்றிலும் சுதந்திரமும், சுயாதீனமுமாய் செயல்படுவதைப் பாதிக்கக்கூடியவை. இந்த ஊழியங்களே சபையை உருவாக்குகின்றன'' எனக் கூறுகிறார்.

வீட்டுப்பாடம்

உங்களை நடத்துகிறவர்களை வாழ்த்துங்கள்.

உங்கள் சபையிலுள்ள தலைவர்களோடு உங்களுக்குத் தொடர்புகள் உண்டா? அவர்கள் உங்களை அறிந்திருக்கிறார்களா? அப்படியில்லாவிட்டால் உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். ""உங்களை நடத்துகிறவர்களை வாழ்த்துங்கள்'' என்று வேதாகமம் கூறுவதைச் செய்ய மறவாதிருங்கள்.

No comments: